Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 23 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், நெதர்லாந்துக் கழகமான பெய்னூர்ட்டின் மைதானத்தில் வியாழக்கிழமை (23) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் தோற்றது.
பெய்னூர்ட் சார்பாக, சன்டியாகோ ஜிமெனெஸ் இரண்டு கோல்களையும், அயஸே உயெடா ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி தோற்றது. சிற்றி சார்பாக ஜக் கிரேலிஷ், எர்லிங்க் பிறோட் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக உஸ்மன் டெம்பிலி, பிராட்லி பார்கோலா, ஜோவா நேவிஸ், கொன்கலோ றாமோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
41 minute ago
27 Jun 2025