Freelancer / 2023 ஜூலை 23 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் போராடுகிறது.
போர்ட் ஒஃப் ஸ்பெய்னில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியா வென்றிருந்த நிலையில், இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, விராட் கோலியின் 121, அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் 80, இரவீந்திர ஜடேஜாவின் 61, யஷஸ்வி ஜைஸ்வாலின் 57, இரவிச்சந்திரன் அஷ்வினின் 56 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், கேமார் றோச், ஜோமெல் வொரிக்கான் ஆகியோர் தலா 3, ஜேஸன் ஹோல்டர் 2, ஷனொ கப்ரியல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், நேற்று முன்தின மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில், அலித் அதனஸே 37 ஓட்டங்களுடனும், ஹோல்டர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட் 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 2, அறிமுக வீரர் முகேஷ் குமார், இரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026