Editorial / 2019 ஜனவரி 31 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஏ.எவ்.சி போர்ண்மெத் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்கடிக்கப்பட்டது.
இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் காணப்படும் லிவர்பூல், தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் சாடியோ மனே பெற்ற கோலோடு முன்னிலை பெற்றபோதும் முதற்பாதி முடிவில், லெய்செஸ்டரின் ஹர் மக்கியூரி, போட்டியின் முதற்பாதி முடிவில் பெற்ற கோலோடு இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற வட்பேர்ட் அணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது.
அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,
15 minute ago
22 minute ago
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
23 minute ago
39 minute ago