Shanmugan Murugavel / 2015 நவம்பர் 25 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்குபெறவுள்ள இங்கிலாந்து வீரர்களில், டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் தற்போது பங்கேற்றுவரும் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் இயன் பெல், அலஸ்டீர் குக் ஆகியோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான வீரர்கள் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இயன் பெல், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோர் தங்களது வருகையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சில காலாமாக இந்த தொடரின் ஒழுங்கமைப்பாளர்களோடு இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் அலஸ்டடீர் குக் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளபோதும், இதுவரையிலும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தவில்லை.
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை, லாகூர், கராச்சி, பெஷாவார், குவாட்டா, இஸ்லமபாத் ஆகிய ஐந்து மாகாணத் தலைநகரங்களின் ஆதாரமாக 24 போட்டிகள் கொண்ட முதலாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் இடம்பெறவுள்ளது. இதில், அணிகளுக்கான வீரர்கள் டிசம்பரில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்தத் தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் இங்கிலாந்து அணியானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில், இங்கிலாந்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட குழாமில் இடம்பெறவுள்ள வீரர்கள், இத்தொடரில் பங்கேற்கமுடியாது.
எனினும் இங்கிலாந்துக்காக போட்டிகளில் பங்கேற்ற லுக் ரைட், மொன்டி பனேசர், டிம் பிரஸ்னன், ஜேட் டேர்ண்பச், ரவி பொப்பாரா, மைக்கல் காபெரி ஆகியோர் இந்த தொடரின் வீரர்களின் பட்டியலில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .