2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பீபா ஊழல்: 2006 உலகக் கிண்ண ஏலத்தில் தவறு ஏற்பு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2006ஆம் ஆண்டு ஜேர்மனியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் ஏலத்தில் தவறுகள் காணப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, அந்த உலகக் கிண்ணத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் ஜேர்மனிக்காக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான பிரான்ஸ் பெக்கென்பவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வாக்குகளை விலைகொடுத்து வாங்கியமை குறித்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

சஞ்சிகையொன்று வெளிப்படுத்திய குற்றச்சாட்டின்படி, 6.7 மில்லியன் யூரோக்களைச் செலுத்தி, ஜேர்மனுக்கான வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பிரான்ஸின் கருத்தின்படி, நிதியியல் மானியமொன்றுக்காக, பீபாவுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பீபாவிடமிருந்து கொடுப்பனவு அளவைக் குறைப்பதற்காக, பீபா நிதியியல் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவொன்றை ஏற்றதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது அதை எண்ணிப் பார்க்கும் போது, அதை நிராகரித்திருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக, அந்தத் தவறுக்கான பொறுப்பை ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .