Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 09 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்
நாவிதன்வெளி கோட்டத்தில் உயர்தர பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.
நாவிதன்வெளி லைசியம் கல்வியகத்தின் செயற்பாட்டாளர் சதாசிவம் சிவசங்கர் தலைமையில் நாவிதன்வெளி பாமடி பொது விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றது.
இதில் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தையும் ஏழாம் கிராமம் எதிரொலி விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும் வெற்றி கொண்டது.
இதன்போது வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கி கெளரவிப்பதையும் மற்றும் நாவிதன்வெளி கோட்டத்தில் உயர்தர பாடசாலைகளிலிருந்து 2023 - 2024 கல்வி ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .