2025 ஜூலை 05, சனிக்கிழமை

மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குச் செல்கிறார் டிபாலா?

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது முன்களவீரர் போலோ டிபாலாவை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் றொமெலு லுக்காக்குவை கைச்சாத்திட இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குச் செல்வதை டிபாலா விரும்பவில்லை எனவும், ஜுவென்டஸிலேயே தனதிடத்துக்காக டிபாலா அணியில் போராட விரும்புவதாகக் கூறப்படுகிறது.

டிபாலாவை 80 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திட இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸும் விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் இலக்காகவுள்ள றொமெலு லுக்காக்கு, இன்டர் மிலனில் இணைவதிலும், இன்டர் மிலனின் முகாமையாளர் அன்டோனியோ கொன்டேயின் கீழும் பணியாற்றுவதில் ஆர்வமாயுள்ளார்.

இதேவேளை, லுக்காக்குவை 80 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் மதிப்பிட்டுள்ள நிலையில் அத்தொகையை இன்னும் ஒரு கழகமும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 54 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு லுக்காக்குவை கைச்சாத்திடும் இன்டர் மிலனின் கோரிக்கையை மன்செஸ்டர் யுனைட்டெட் ஏற்கெனவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .