Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிற்ஸர்லாந்தின் பேசல் நகரில் இடம்பெற்று வரும் உள்ளக டென்னிஸ் தொடரினை வெல்பவர்களில் மூன்றாமிடத்தில் காணப்பட்ட ஸ்பெயினின் ரஃபேல் நடால் மயிரிழையில் தனது ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
தரவரிசையில் 69 ஆவது இடத்திலுள்ள செக் குடியரசின் லூக்காஸ் ரொஸோலை எதிர் கொண்ட நடால், அவரிடமிருந்து பலத்த போராட்டங்களின் மத்தியிலேயே 1-6 7-5 7-6(4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நடாலின் பரமவைரிகளில் ஒருவராக ரொஸோ காணப்படுகின்றார். கடந்த 2012ஆம் ஆண்டு விம்பிள்டன் பகிரங்கத் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில் நடாலைத் தோற்கடித்து ரொஸோ அதிர்ச்சியளித்திருந்தார். எனினும் 2014ஆம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் நடால் பழிதீர்த்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .