2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மரேக்கு இடுப்பில் சத்திர சிகிச்சை

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரான அன்டி மரேக்கு இடுப்பைச் சீராக்கும் சத்திர சிகிச்சை இலண்டனில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், தனது வலது இடுப்புப் பகுதியில் கடந்தாண்டு ஜனவரியில் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட பின்னர், கடந்தாண்டு ஜூனில் போட்டிகளுக்கு திரும்பிய அன்டி மரே 15 போட்டிகளில் இதுவரை விளையாடியிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் பிரபலமான இரட்டையர் டென்னிஸ் வீரரான பொப் பிரயனும் அன்டி மரேயி இதே சத்திரசிகிச்சையை கடந்தாண்டு மேற்கொண்டிருந்தார். சத்திரசிகிச்சை மேற்கொண்டு ஐந்து மாதங்களுக்குப் பின்னர் போட்டிகளுக்குத் திரும்பிய 40 வயதான அவர், தனது சகோதரர் மைக் பிரயனுடன் இவ்வாண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் காலிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார்.

அந்தவகையில், சத்திர சிகிச்சை வெற்றிகரமனதாக விளங்கினால், விம்பிள்டன் தொடரில் பிரியாவிடை பிரசன்னமொன்றை அன்டி மரே மேற்கொள்ள முடியுமென்றபோதும் முன்னர் போன்று அவரால் விளையாட முடியுமா என்பது பலத்த சந்தேகமாகவே காணப்படுகிறது. விம்பிள்டன் தொடருக்கு இன்னும் ஐந்து மாதங்கள் காணப்படுகின்ற நிலையில், அன்டி மரேயின் உடன்பிறந்தவரான ஜேமி மரே இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் ஒருவரராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டனைத் தொடர்ந்து இவ்வாண்டு ஓய்வுபெற விரும்புவதாக ஐக்கிய இராச்சியத்தின் மரே இம்மாதம் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதலாவது சுற்றிலேயே வெளியேறிய பின்னர் இத்தொடரே தனது இறுதித் தொடராக அமையலாம் எனக் கூறியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .