2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

மெஸ்ஸி, சுவாரஸூடன் இணையும் நெய்மர்?

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 08 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மியாமியில் தனது முன்னாள் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் சக வீரர்களான லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸுடன் மீள இணைவது சுவாரஸ்யத்துக்குரிய விடயமென பிரேஸிலின் முன்களவீரரான நெய்மர் தெரிவித்துள்ளதுடன், சவுதி அரேபியக் கழகமான அல்-ஹிலாலுடனான ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்வதை மறுக்கவில்லை.

பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து அல்-ஹிலாலில் 2023ஆம் ஆண்டு இணைந்த பின்னர் காயங்கள் காரணமாக ஏழு போட்டிகளில் மாத்திரமே 32 வயதான விளையாடியிருந்தார்.

இதேவேளை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடரே தனது இறுதி உலகக் கிண்ணம் என நெய்மர் தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .