Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்னாள் முன்களவீரரான ரொபினியோ, தனது முன்னாள் கழகமான பிரேஸிலின் சன்டோஸுடன் ஐந்து மாத ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன், பிரேஸிலின் குறைந்நபட்ச சம்பளத்துக்கு சற்று அதிகமாக மாதமொன்றுக்கு 271 ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெறவுள்ளார்.
துருக்கியக் கழகமான இஸ்தான்புல் பசகெஷிரிலிருந்து விலகிய பின்னரே 36 வயதான ரொபினியோ தனது ஆரம்பக் கழகமான சன்டோஸில் இணைந்துள்ளார்.
பிரேஸில் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் முன்னாள் முன்களவீரரான ரொபினியோ, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் ஆகியவற்றுக்காகவும் விளையாடியுள்ளார்.
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026