Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு பாகிஸ்தானின் மொஹமட் றிஸ்வான் முன்னேறியுள்ளார்.
ஆசியக் கிண்ணத் தொடரில் ஹொங் கொங்குக்கெதிராக ஆட்டமிழக்காமல் 78, இந்தியாவுக்கெதிராக 71 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, இத்தொடரில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கெதிராக முறையே 20, 35, 52 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் பதும் நிஸங்க, ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், இத்தொடரில் இலங்கைக்கெதிராக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் ஏழாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதேவேளை, இத்தொடரில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கெதிராக தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றிய இலங்கையின் மகேஷ் தீக்ஷன எட்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது, மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 13, 94 ஓட்டங்களைப் பெற்றதுடன், நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 20 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர், துடுப்பாட்ட தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago