2025 மே 03, சனிக்கிழமை

முதலாவது டெஸ்டைத் தவறவிடும் கில்?

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 17 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் பிடியெடுப்பொன்றை எடுக்கும்போது இடதுகை பெருவிரலில் இந்தியாவின் ஷுப்மன் கில் சனிக்கிழமை (16) காயமடைந்துள்ளார். ஆரம்ப கட்ட தகவல்களின்படி முறிவெனக் கூறப்படுகின்ற நிலையில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டை அவர் தவறவிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் பங்கேற்பு தெளிவில்லாமலுள்ளதுடன், லோகேஷ் ராகுலுக்கும் வெள்ளிக்கிழமை (15) முழங்கையில் பந்து தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்தியக் குழாமிலுள்ள ஆரம்பத் துடுப்பாட்டவீரரான அபிமன்யு ஈஸ்வரனும் பிரகாசிக்காத நிலையில் தற்போது இந்திய ஏ அணிக் குழாமில் இடம்பெற்றிருந்த தேவ்டுட் படிக்கல்லை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X