2025 மே 17, சனிக்கிழமை

முதலிடத்தில் முகமதுசிராஜ்

Freelancer   / 2023 நவம்பர் 09 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம்வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில், பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3ஆவது இடத்திலும் உள்ளனர் .இந்தியாவின் குல்தீப் யாதவ் 4ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5ஆவது இடத்தில் உள்ளனர்.

இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8ஆவது இடத்திலும், முகமது ஷமி 10ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .