2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முதலிடத்தை பிடித்தார் சாமரி அத்தபத்து

Editorial   / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், சூப்பர் துடுப்பாட்ட வீராங்கனையுமான சாமரி அத்தபத்து, உலக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் திங்கட்கிழமை (22) புதுப்பிப்பின் படி, சாமரி அத்தபத்து 773 போனஸ் புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தார்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை குவிப்பதற்கு முன்பு சமாரி துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

சாமரி இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 3,513 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் நடாலி சீவர் 764 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் லாரா வால்வார்ட் 718 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .