2025 மே 16, வெள்ளிக்கிழமை

முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராட்டம்

Mayu   / 2023 டிசெம்பர் 28 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்
முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராடுகின்றன.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெல்பேணில் நேற்று முன்தினம் ஆரம்பித்த
இப்போட்டியின் நேற்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை
இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, ட்ரெவிஸ் ஹெட்டை சிறிது
நேரத்தில் ஷகீன் ஷா அஃப்ரிடியிடம் இழந்தது.

பின்னர் மர்னுஸ் லபுஷைனை 63 ஓட்டங்களுடன் ஆமிர் ஜமாலிடம் இழந்த அவுஸ்திரேலியா, அலெக்ஸ் காரியை அப்ரியிடம் இழந்தது.

மிற்செல் ஸ்டார்க்கை சிறிது நேரத்திலேயே மிர் ஹம்ஸாவிடம் இழந்தது. பின்னர் 41
ஓட்டங்களுடன் மிற்செல் மார்ஷும் ஹம்ஸாவிடம் வீழ்ந்ததோடு, அணித்தலைவர் பற் கமின்ஸ்
ஜமாலிடம் வீழ்ந்ததோடு, நேதன் லையன் ஹஸன் அலியிடம் விழ சகல விக்கெட்டுகளையும்
இழந்து 318 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் அவுஸ்திரேலியா பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே இமாம்-உல்-
ஹக்கை நேதன் லையனிடம் இழந்தது.

பின்னர் இணைந்த அப்துல்லா ஷஃபிக்கும், அணித்தலைவர் ஷண் மசூட்டும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், ஷஃபிக் 62 ஓட்டங்களுடனும், அடுத்து வந்த பாபர் அஸாமும் கமின்ஸிடம் வீழ்ந்தனர். 54 ஓட்டங்களுடன் லையனிடம் மசூட்விழ, செளட் ஷகீல் ஜொஸ் ஹேசில்வூட்டிஅம் வீழ்ந்தார்.

பின்னர் கமின்ஸிடம் அக்ஹா சல்மான் விழ நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது. களத்தில் மொஹமட் றிஸ்வான் ஆட்டமிழக்காமல் 29 (34) ஓட்டங்களுடனும், ஆமிர் ஜமால் இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .