Mithuna / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெல்பேணில் செவ்வாய்க்கிழமை (26) ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் ஷண் மசூட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா நிதானமாக ஆரம்பித்த நிலையில், டேவிட் வோர்னரை 38 ஓட்டங்களுடனும், உஸ்மான் கவாஜாவை 42 ஓட்டங்களுடனும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அக்ஹா சல்மான், ஹஸன் அலியிடம் பறிகொடுத்தது.
பின்னர் மழை குறுக்கிட்டு மீண்டும் ஆட்டம் ஆரம்பித்தபோது குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் ஆமிர் ஜமாலிடம் 26 ஓட்டங்களுடன் ஸ்டீவன் ஸ்மித் வீழ்ந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (26) முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. தற்போது களத்தில் மர்னுஸ் லபுஷைன் 44 ஓட்டங்களுடனும், ட்ரெவிஸ் ஹெட் ஒன்பது ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago