Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய இடம்பெற்றுள்ளார்.
சட்டரீதியற்ற பந்துவீச்சுப் பாணி காரணமாக ஓராண்டுத் தடையை எதிர்நோக்கியிருந்த தனஞ்சய, தனது பந்துவீச்சுப்பாணியை திருத்திய பின்னர் முதன்முறையாக இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, பத்தும் நிஸங்க, அஷேன் பண்டார, டில்ஷான் மதுஷங்க ஆகிய புதுமுகவீரர்களும் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, ரமேஷ் மென்டிஸ் முதன்முறையாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான குழாமொன்றில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவராகப் பெயரிடப்பட்ட தசுன் ஷானக, வீசா பிரச்சினைகள் காரணமாக ஏனைய குழாமுடன் நேற்று முன்தினமிரவு பயணித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழாம்: திமுத் கருணாரத்ன (ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவர்), தசுன் ஷானக ( இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவர்), தனுஷ்க குணதிலக, பத்தும் நிஸங்க, அஷேன் பண்டார, ஒஷாத பெர்ணான்டோ, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, திஸர பெரேரா, கமிந்து மென்டிஸ், வனிடு ஹஸரங்க, ரமேஷ் மென்டிஸ், நுவான் பிரதீப், அசித பெர்ணான்டோ, டுஷ்மந்த சமீர, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகான், டில்ஷான் மதுஷங்க, சுரங்க லக்மால்.
3 minute ago
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
2 hours ago
2 hours ago