Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூலை 23 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியிலும் அவுஸ்திரேலியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்ற அவுஸ்திரேலியா, ஜமைக்காவில் புதன்கிழமை (23) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது. அவுஸ்திரேலியா சார்பாக மத்தியூ குனுமென் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், பிரெண்டன் கிங்கின் 51 (36), அன்ட்ரே ரஸலின் 36 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அடம் ஸாம்பா 4-0-29-3, கிளென் மக்ஸ்வெல் 2-0-15-2, நாதன் எலிஸ் 4-0-34-2, பென் டுவார்ஷுஸ் 4-0-37-1, மத்தியூ குனுமென் 4-0-33-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 173 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ஜொஷ் இங்லிஸின் ஆட்டமிழக்காத 78 (33), கமரன் கிறீனின் ஆட்டமிழக்காத 56 (32) ஓட்டங்களோடு 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சுல் அகீல் ஹொஸைன் 4-0-31-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக இங்லிஸ் தெரிவானார்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025