Shanmugan Murugavel / 2021 மார்ச் 09 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, அன்டிகுவாவில் இலங்கை நேரப்படி நாளையிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியபோதும், கிறிஸ் கெய்ல், டுவைன் பிராவோ உள்ளிட்ட முன்னாள் அணித்தலைவர்கள் இல்லாமல் களமிறங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெல்லும் சிறந்த வாய்ப்பு இலங்கை காணப்படுகின்றது.
வனிடு ஹஸரங்க, தனுஷ்க குணதிலக, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகானை உள்ளடக்கிய சுழற்பந்துவீச்சுக் குழாமானது இலங்கைக்கு வெற்றி பெறும் வாய்ப்புகளை அதிகம் வழங்குகின்றது.
மறுபக்கமாக இலங்கையைச் சவாலுக்குட்படுத்துவதற்கு, ஷே ஹோப், அணித்தலைவர் கெரான் பொலார்ட், நிக்கலஸ் பூரான் உள்ளிட்ட வீரர்களிடமிருந்து நீண்ட இனிங்ஸொன்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாமிடத்தில் இலங்கையும், ஒன்பதாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் காணப்படுகின்ற நிலையில், இத்தொடரின் எம்முடிவும் தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தாதென்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
30 minute ago
47 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
30 minute ago
47 minute ago
50 minute ago