2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மே. தீவுகளுக்கெதிராக169 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த இலங்கை

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 22 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களையே இலங்கை பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் அன்டிகுவாவில் நேற்றிரவு ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக, 70 ஓட்டங்களைப் பெற்ற லஹிரு திரிமான்ன மாத்திரம் நிலைத்து நின்ற நிலையில், ஏனையோர் குறிப்பிட்ட இடைவெளிகளில், ரஹீம் கொர்ன்வோல், ஜேஸன் ஹோல்டர், கேமார் றோச்சிடம் விக்கெட்டுகளை பறிகொடுக்க, சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களையே இலங்கை பெற்றது. துடுப்பாட்டத்தில், திரிமான்ன தவிர, நிரோஷன் டிக்வெல்ல 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில், ஹோல்டர் 5, றோச் 3, கொர்ன்வோல் ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற மேற்கிந்தியத் தீவுகள், முதலாம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில், ஜோன் கம்பெல் 7, பிறத்வெய்ட் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .