2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மே.தீவுகளை இனிங்ஸால் வென்றது நியூசிலாந்து

Editorial   / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய முதலாவது போட்டியில் இனிங்ஸ் மற்றும் 67 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்றது.

 தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய நான்காம் நாளை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி,சகல விக்கெட்டுகளையும்  இழந்து 309 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இனிங்ஸால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக, கிரேய்க் பிறத்வெய்ட் 91, ஷிம்ரோன் ஹெட்மயர் 66, கெரான் பவல் 40, ஷை ஹோப் 37 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நியூசிலாந்து அணி சார்பாக, மற் ஹென்றி 3, கொலின்ட் டி கிரன்ட்ஹொம், ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக நீல் வக்னர் தெரிவானார்.

ஸ்கோர் விபரம்:

மேற்கிந்தியத் தீவுகள்: 134/10 (துடுப்பாட்டம்: கெரான் பவல் 42 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 7/39)

நியூசிலாந்து: 520/9 (துடுப்பாட்டம்: டொம் பிளன்டெல் ஆ.இ 107. கொலின் டி கிரன்ட்ஹொம் 105, றொஸ் டெய்லர் 93, ஹென்றி நிக்கொல்ஸ் 67, ஜீட் றாவல் 42, டொம் லேதம் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு:  கேமார் றோச் 3/85, மிக்கேல் கமின்ஸ் 2/92, றொஸ்டன் சேஸ் 2/95)

மேற்கிந்தியத் தீவுகள்: 319/10 (துடுப்பாட்டம்: கிரேட்க் பிறத்வெய்ட் 91, ஷிம்ரோன் ஹெட்மயர் 66, கெரான் பவல் 40, ஷை ஹோப் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 3/57, கொலின் டி கிரன்ட்ஹொம் 2/40, ட்ரெண்ட் போல்ட் 2/87, நீல் வக்னர் 2/102)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X