2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மோட்டார் பந்தய சம்பியன் நாட்டிற்கு திரும்பினார்

Mayu   / 2024 ஜூன் 27 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிகேஜி கபில

ஜப்பானில் நடைபெற்ற GT World Challenge-Asia போட்டியில் "வெள்ளி பிரிவில்" கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்ற இலங்கை மோட்டார் பந்தய சம்பியன் எஷான் பீரிஸ் புதன்கிழமை (26) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

குறித்த கார் பந்தய போட்டி இது கடந்த சனிக்கிழமை (22) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று ஜப்பானின் Fuji City இல் நடைபெற்றது.

மேலும் Eshan Peiris Porsche-911 காரை ஓட்டி இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ளதுடன், முழுப் போட்டியிலும் சம்பியன் பட்டத்தை வெல்வார் என திரு. ஈஷான் பீரிஸ் நம்புவதாக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.

எஷான் பீரிஸ் இலங்கையின் பிரபல மோட்டார் பந்தய சாம்பியனான டேவிட் பீரிஸின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .