Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலூன் டி ஓஆர் விருதுக்கான பட்டியலில் பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸி, நேமர் இடம்பெற்றுள்ள போதும் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளின் பதினொருவர் அணியில் அவர்களுக்கு இடம்கிடைக்கவில்லை. தவிர, குழு இயில் பார்சிலோனா சார்பாக அதிகூடிய (5) கோல்களைப் பெற்ற லூயிஸ் சுவரேசுக்கும் மேற்படி அணியில் இடம் கிடைக்கவில்லை.
பதினான்கு புள்ளிகளுடன் பார்சிலோனா அணியானது முதலாவதாக தகுதி பெற்றிருந்தபோது, பார்சிலோனா அணியின் முன்கள மும்மூர்த்திகளான மெஸ்ஸி, நேமர், சுவரேஸ் 10 கோல்களைப் பெற்றிருந்தனர்.
மூன்று முன்கள வீரர்கள், மூன்று மத்தியகள வீரர்கள், நான்கு பின்கள வீரர்கள், கோல் காப்பாளர் என்ற பாணியில் அறிவிக்கப்பட்ட அணியில், ரியல் மட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, செனிட் சென் பீற்றர்ஸ்பேர்க்கின் ஹல்க், பெயார்ண் முனிச் அணியின் தோமஸ் முல்லர் ஆகியோரே முன்கள வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கடந்த வருட பலூன் டி ஓஆர் விருது வெற்றியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குழுநிலைப் போட்டிகளில் 11 கோல்களைப் பெற்றிருந்த நிலையில், ஆரம்பக் கட்ட முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற மெஸ்ஸி மூன்று கோல்களையே பெற்றிருந்தார். அதனையடுத்து முழங்கால் காயம் காரணமாக ஏழு வாரங்களுக்கு போட்டிகளில் இருந்து விலகியிருந்தார்.
மத்திய கள வரிசையில் ஐந்து கோல்களைப் பெற்ற செல்சியின் வில்லியானும் மூன்று கோல்களைப் பெற்ற மன்செஸ்டர் சிற்றியின் ரஹீம் ஸ்டேர்லிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .