Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இலங்கையில் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் கிரிக்கெட் பரவவில்லை. அது கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ள இலங்கையணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், யாழ்ப்பாணத்திலுள்ள வறுமையானதொரு ஆனால் திறமையான நபர் கொழும்புக்கு வர முடியாது எனக் கூறியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த முரளிதரன், ஏனைய மாவட்டங்களில் திறமைகள் இழக்கப்படுவதாகவும் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட வீரர்களே, அவர்கள் கொழும்புக்கு அருகில் இருப்பதால் வருவதாகக் கூறியுள்ளார்.
இதுதவிர, “[குசல்] மென்டிஸ் போன்ற இளம் வீரர்கள், நிறையத் திறமையைக் கொண்டிருக்கின்றபோதும் அவர்கள் மிகவும் தொடர்ச்சியற்றவர்களாக இருக்கின்றார்கள். இது, அவர்களது துடுப்பாட்டத்தில் மிகவும் அழுத்தத்தை வழங்குகின்றது. கடந்த மூன்று தொடக்கம் நான்கு ஆண்டுகளாக இதே கதையாகவுள்ளது. அங்கே எந்தவொரு முன்னேற்றமும் நிகழவில்லை. வருகின்ற இளம் வீரர்கள் திறமையைக் கொண்டிருப்பதில்லை. சர்வதேச கிரிக்கெட்டின் மத்தியில் அனுப்பப்படும்போது அவர்களால் என்ன செய்ய முடியும்.
இந்நாட்களில் இலங்கை மிகவும் மோசமாக விளையாடுகிறது. ஆனால், அவுஸ்திரேலியாவும் மோசமாக விளையாடுகிறது. எவ்வாறெனினும், அவுஸ்திரேலியாவை விட இலங்கை மோசமாக விளையாடுகிறது. பாடசாலைக் கிரிக்கெட்டின் மட்டம் கீழே சென்றுள்ளது. நாங்கள் முதற்தரப் போட்டிகளிலிருந்து தயாரிக்க வேண்டும். ஆனால் திறமை அங்கில்லை.
சர்வதேச கிரிக்கெட் சபை [மோசடி தொடர்பாக] எந்தப் பெயர்களையும் வெளியிடவில்லை. அது இல்லாமல் ஒரு நாட்டை நீங்கள் எவ்வாறு குற்றஞ்சாட்ட முடியும். சர்வதேச கிரிக்கெட் சபை பெயர்களை வெளிப்படுத்தி இதைத்தான் அவர்கள் செய்தனர் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
55 minute ago
03 Oct 2025
03 Oct 2025
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
03 Oct 2025
03 Oct 2025
03 Oct 2025