Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட், மன்செஸ்டர் ஆகிய அணிகளுக்கிடையே மன்செஸ்டர் யுனைட்டெட்டின் ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் 43ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வா பெற்ற கோல் காரணமாக மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும் நிக்கொலஸ் ஒட்டமென்டி, பபியான் டெல்பின் மோசமான தடுப்புக் காரணமாக முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் மார்க்கஸ் றஷ்போர்ட் பெற்ற கோல் காரணமாக கோல் எண்ணிக்கையை மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
போட்டியின் இரண்டாவது பாதியில் யுனைட்டெட்டின் றொமேலு லுக்காக்கு தவறவிட்ட பந்தை, யுனைட்டெட் பெற்ற கோலுக்கு காரணமாக அமைந்த ஒருவரான நிக்கொலஸ் ஒட்டமென்டி பெற்ற கோல் காரணமாக, இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது.
இதேவேளை, லிவர்பூல், எவெர்ட்டன் அணிகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றதோடு, எவெர்ட்டன் சார்பாகப் பெற்ற கோலை வெய்ன் றூணி பெற்றார்.
இந்நிலையில், ஆர்சனல், செளதாம்டன் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலிவர் ஜிரோட் பெற்றதோடு, செளதாம்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை சார்லி ஒஸ்டின் பெற்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago