Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் ஸ்பெய்ன், இத்தாலி உள்ளிட்ட அணிகள் வென்றுள்ளன.
தமது நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஃபரோ தீவுகளுடனான குழு எஃப் போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றிருந்தது. ஸ்பெய்ன் சார்பாக, றொட்றிகோ, பக்கோ அல்கேஸர் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, ஃபின்லாந்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அந்நாட்டுடனான குழு ஜே போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. இத்தாலி சார்பாக, சிரோ இம்மொபைல், ஜோர்ஜினியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். ஃபின்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை டீமு புக்கி பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago