Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெவண்டி அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் கால்பந்தாட்டக் கழகம் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போட்டியில், அவ்வணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ, ராவுலின் ரியல் மட்ரிட் அணிக்காக அதிக கோல்கள் பெற்றவர் என்ற சாதனையை முறியடித்தார்.
16 வருடங்களாக 741 போட்டிகளில் விளையாடி ராவுல் பெற்ற 323 என்ற கோல்கள் என்ற சாதனையை 30 வயதான ரொனால்டோ, வெறும் ஏழு பருவங்களில் 310 போட்டிகளில் மட்டும் விளையாடி அவரின் சாதனையைத் தகர்த்தார்.
இந்தபோட்டியின் 27வது நிமிடத்தில் மார்செலோவின் கோலுக்கு உதவி புரிந்த ரொனால்டோ, 30வது நிமிடத்தில் தனது சாதனை 324 வது கோலைப் பெற்றிருந்தார். பின்னர் 81வது நிமிடத்தில் மாற்றுவீரர் ஜெசே ரொட்ரிகாஸ் ஒரு கோலைப் பெற ரியல் மட்ரிட் அணி போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
3 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago