2025 ஜூலை 05, சனிக்கிழமை

றியல் மட்ரிட்டை வென்று இறுதிப் போட்டியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளைக் கொண்ட ஆறாவது ஒளடி கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றுள்ளது.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற தமது அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றிருந்தது.

இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, றியல் மட்ரிட்டின் நட்சத்திர முன்களவீரரான ஈடின் ஹஸார்ட், பின்களவீரரான மார்ஷெல்லோ விட்ட தவறுகளைப் பயன்படுத்தி போட்டியின் 22ஆவது நிமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் நட்சத்திர முன்களவீரர் ஹரி கேன் பெற்றிருந்தார்.

இதேவேளை, இப்போட்டியைத் தொடர்ந்து இடம்பெற்ற மற்றைய அரையிறுதிப் போட்டியில் தமது சொந்த மைதானத்தில் துருக்கிக் கழகமான ஃபெனர்பாச்சேயை எதிர்கொண்ட பயேர்ண் மியூனிச் 6-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. பயேர்ண் மியூனிச் சார்பாக, தோமஸ் மல்லர் மூன்று கோல்களையும், றெனாட்டோ சந்தேஸ், லியோன் கொரெட்ஸ்கா, கிங்ஸ்லி கோமான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஃபெனர்பாச்சே சார்பாகப் பெறப்பட்ட கோலை மக்ஸிமில்லியன் மக்ஸ் க்றூஸ் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .