2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

றியோ ஒலிம்பிக்: தங்கத்துடன் விடைபெற்றார் பெல்ப்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் போட்டிகளில் தனது இறுதிப் போட்டியாக, 4*100 மீற்றர் மெட்லி அஞ்சலோட்டப் போட்டியில் பங்கேற்ற ஐக்கிய அமெரிக்காவின் உலக சாதனையாளரான மைக்கல் பெல்ப்ஸ், அதிரடியான பெறுபேறுகளை வெளிக்காட்டி, தனது அமெரிக்க அணிக்கு முன்னிலையை வழங்கி, ஒலிம்பிக் போட்டிகளில் தனது 23ஆவது தங்கத்துடன் விடைபெற்றுக் கொண்டார்.

31 வயதான பெல்ப்ஸ், 23 தங்கப் பதக்கங்களுக்கு மேலதிகமாக, வெள்ளிப்பதக்கங்கள் மூன்றையும், வெண்கலப் பதக்கங்கள் இரண்டையும் ஒலிம்பிக் போட்டிகளில் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில், ஒன்பது தங்கப் பதக்கங்களைப் பெற்று, இரண்டாவதாக அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள சோவியத் யூனியனை பிரதிநிதித்துவப்படுத்திய லரிஸா லடைனியாவை விட இரண்டு மடங்கு அதிகமான தங்கப் பதக்கங்களை பெல்ப்ஸ் பெற்றுள்ளார்.

எவ்வாறெனினும் 100 மீற்றர் பட்டர்பிளை பிரிவில், சிங்கப்பூரைச் சேர்ந்த 21 வயதான ஜோஸப் ஸ்கூலிங்கிடம் பெல்ப்ஸ் தோல்வியடைந்திருந்தார். பெல்ப்ஸை உதாரண புருஷராகக் கொண்ட  ஸ்கூலிங், குறித்த போட்டித் தூரத்தை 50.39 செக்கன்களில் கடந்து, ஒலிம்பிக் போட்டிச் சாதனையையும் ஏற்படுத்தியிருந்தார். இப்போட்டியில் பெல்ப்ஸ் வேறு இருவருடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, பெண்களுக்கான 4*100 மீற்றர் மெட்லி அஞ்சலோட்டப் போட்டியில் ஐக்கிய அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது, ஒலிம்பிக் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்காவின் 1,000ஆவது பதக்கம் ஆக பதிவு செய்யப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் செயற்குழு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .