2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

றியோ ஒலிம்பிக்: பூப்பந்தாட்டத்தில் 3ஆவது முறையாகவும் மலேஷியாவுக்கு வெள்ளி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூப்பந்தாட்டம் மிகவும் பிரபலமாக உள்ள மலேஷியா, தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் வலியைச் சந்தித்தது. அந்நாட்டின் நட்சத்திர வீரரும் உலகின் முதல்நிலை பூப்பந்தாட்ட வீரருமான லீ சொங் வெய், தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும், ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையே பெற்றுக் கொண்டார்.

2008ஆம் ஆண்டிலும் 2012ஆம் ஆண்டிலும் சீனாவின் லின் டானிடம் தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றிய லீ சொங் வெய், தங்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் இம்முறை களமிறங்கினார். தனது கனவை, கடந்த இரு தடவைகளாகக் கலைத்த லின் டானினை, அரையிறுதியில் தோற்கடித்த நம்பிக்கையுடன், லீ சொங் வெய் களமிறங்கினார்.

ஆனால், அவரின் கனவை, சீனாவின் செங் லொங், கலைத்தார். விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 21-18, 21-18 என்ற செட் கணக்கில், செங் லொங் வெற்றிபெற்றார். இதனால் லீ சொங் வெய்-க்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
அவரால் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியாத போதிலும், தங்கள் நாட்டின் நட்சத்திரம் அவரே எனப் புகழ்ந்துள்ள மலேஷியர்கள், அவரைக் கவலைப்பட வேண்டாமெனவும் கோரி, சமூக ஊடக வலையமைப்புகள் ஊடாக, அவரைப் புகழ்ந்துவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .