Shanmugan Murugavel / 2026 ஜனவரி 19 , பி.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், றியல் சொஸைடட்டின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தோற்றது.
பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் பெற்றதோடு, சொஸைடட் சார்பாக மிகேல் ஒயர்ஸபல், கொன்கலோ குயெடெஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 49 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றது. 48 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட் கானப்படுகின்றது. வில்லாறியலும், அத்லெட்டிகோ மட்ரிட்டும் தலா 41 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான முடிவுகளின்படி மூன்றாம், நான்காமிடங்களில் முறையே காணப்படுகின்றது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago