Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்ட் போட்டியில் ஆர்சனல் சம்பியனானது.
இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்கும், விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க சவால் கிண்ணத் தொடரின் சம்பியன்களான ஆர்சனலுக்குமிடையே வெம்ப்ளியில் நேற்றிரவு நடைபெற்ற குறித்த போட்டியில் பெனால்டியிலேயே ஆர்சனல் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியின் 12ஆவது நிமிடத்தில் ஆர்சனலின் அணித்தலைவரும் முன்களவீரருமான பியர்-எம்ரிக் உபமெயாங்க் பெற்ற கோல் காரணமாக அவ்வணி முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் போட்டியின் 73ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய லிவர்பூலின் முன்களவீரர் தகுமி மினமினாவோ பெற்ற கோல் காரணமாக கோலெண்ணிக்கையை லிவர்பூல் சமப்படுத்தி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டியானது வழமையான நேர முடிவில் காணப்பட்டதையடுத்து பெனால்டி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது.
பெனால்டியில் ஆர்சனல் சார்பாக றெய்ஸ் நெல்சன், ஐன்ஸ்லி மைட்லான்ட்-நைல்ஸ், செட்ரிக் சொராஸ், டேவிட் லூயிஸ், பியர்-எம்ரிக் உபமெயாங்க் ஆகிய ஐவரும் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்த நிலையில், லிவர்பூல் சார்பாக மொஹமட் சாலா, பேபின்ஹோ, தகுமி மினமினாவோ, கேர்ட்டிஸ் ஜோன்ஸ் ஆகிய நால்வரே தமது பெனால்டிகளை உட்செலுத்தியதுடன், கோல் கம்பத்துக்கு மேலால் றிஹியன் புரூஸ்டர் தனது பெனால்டியை செலுத்தியிருந்த நிலையில் 5-4 என்ற ரீதியில் ஆர்சனல் வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025