Shanmugan Murugavel / 2026 ஜனவரி 18 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றது.
மியூனிச் சார்பாக சேர்ஜ் நர்பி, ஹரி கேன், ஜொனதன் தா, அலெக்ஸான்டர் பவ்லோவிச், மைக்கல் ஒலிஸே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமுலோ கர்டோஸோ பெற்றிருந்தார்.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் காணப்படுகின்றது. 39 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பொரூசியா டொட்டமுண்டும், 33 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஹொஃபென்ஹெய்மும், 32 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லெய்ப்ஸிக்கும் காணப்படுகின்றன. லெய்ப்ஸிக்கும், வி.எஃப்.பி ஸ்டட்காட்டும் தலா 32 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசம் காரணமாக நான்காமிடத்தில் லெய்ப்ஸிக்கும், ஐந்தாமிடத்தில் ஸ்டட்கார்ட்டும் காணப்படுகின்றன. இதில் மியூனிச்சும், டொட்டமுண்டும் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளன.
5 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
52 minute ago
2 hours ago