2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

”வன்னிப்பெருச்சமர்” ஆரம்பம்

Editorial   / 2024 ஏப்ரல் 11 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஷ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கும் இடையிலான வருடாவருடம் நடைபெறும் ”வன்னிப்பெருச்சமர்” துடுப்பாட்ட போட்டியானது  இந்த  வருடமும் சிறப்பான முறையில்   புதன்கிழமை  (10) காலை 9.00 மணிக்கு  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி  மைதானத்தில் சிறப்பு ஆரம்பமானது.

இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் போட்டியினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X