Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 16 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னியின் பெரும்போர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் இடையிலான நட்புக்கிண்ணத் தொடர் கோலாகலமாக ஆரம்பமானது. மணியளவில் பாடசாலை மைதானத்தில் இன்று காலை 9 ஆரம்பமானது. நாளையும் (17) நடைபெறும்.
2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த முதல் தொடர் வருடம் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இதேவைளை 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த போட்டியில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது.
யுத்த சூழ் நிலை காரணமாக 2009,2010,2011 மற்றும் 2012 போட்டிகள் நடைபெறாத நிலையில் 2013ம் ஆண்டு மீண்டும் மூன்றாவது போட்டியாக நடைபெற்றது. தொடர்ந்து 2014,2015,2016,2017,2018 மற்றும் 2019 போட்டிகள் நடைபெற்றபோதும் கொவிட் காரணமாக 2020 ஆம் ஆண்டு நடைபெறவில்லை.
குறித்த போட்டி 2021ம் ஆண்டுக்கான 10வது போட்டியாக நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற 10 போட்டிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அதேவேளை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
10 ஆவது வன்னியின் பெரும் சமர் தொடரில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கு யோ.பிரவிந்தன் தலைமைதாங்கும் அதே வேளை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்கு தே.உதயநேசனும் தலைமை தாங்குகின்றனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கு போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை பயிற்றுவிப்பாளராக ச.அலன்டீலனும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு பயிற்றுவிப்பாளராக A.ரதுர்ஜனும் கடமையாற்றுகின்றனர்.
இன்று இடம்பெறும் போட்டியானது கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். யுத்தத்திற்கு பின்னற் குறித்த விளையாட்டு மைதானம் இராணுவத்தினர் வசமிருந்ததுடன், சர்வதேச விளையாட்டு மைதானதானத்து ஏற்றவகையில் நிர்மாணிக்கும் நோக்கில் அம்மைதானம் கையகப்படுத்தப்பட்டது.
பாடசாலை சமூகம் மற்றும் பல்வேறு தரப்பினரது தொடர்ச்சியான வேண்டுகைக்கு அமைவாக குறித்த மைதான காணி பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டு இன்று முதல் முதலாக குறித்த பாடசாலை மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறுகின்றமை இங்கு விசேட அம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
52 minute ago
3 hours ago