Editorial / 2026 ஜனவரி 28 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல Formula 1 கார்ப்பந்தய வீரர் மைக்கல் ஷூமாக்கரின் (Michael Schumacher) உடல்நிலை சற்று மேம்பட்டுள்ளது.
12 ஆண்டுக்கு முன்னர் கடுமையான விபத்து ஒன்றில் அவர் படுத்த படுக்கையானார்.
இப்போது அவர் சக்கர நாற்காலியில் நடமாடுவதாய் Fox Sports அறிக்கை வெளியிட்டது.
ஏழு முறை உலகக் கிண்ணப் பட்டத்தை வென்றவர் ஷூமாக்கர்.
2013ஆம் ஆண்டு பிரஞ்சு ஆல்ப் மலைப் பகுதியில் சறுக்கு விளையாட்டின்போது அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவரைப் பற்றி மக்கள் பெரிதும் பேசவில்லை. தற்போது மஜோர்க்கா (Majorca) வீட்டில் அவர் மருத்துவக் கண்காணிப்பில் மனைவியுடன் இருக்கிறார்.
தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது அவருக்குப் புரியத் தொடங்கியுள்ளது. அசைவுகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் சிறிய முன்னேற்றங்கள் இருப்பதாய் தகவல்கள் கூறுகின்றன.
ஷூமாக்கரின் உடல்நிலையை அவரின் குடும்பம் ரகசியமாக வைத்துள்ளது. மருத்துவத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
பொதுமக்கள் அவரைப் பார்ப்பது இப்போது சாத்தியமில்லை என்று அவருக்கு நெருக்கமானோர் கூறியிருக்கின்றனர்.
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago