Freelancer / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கிண்ண கிரிக்கெட் தொடர் புதன்கிழமை (25) திகதி நடைப்பெற்றது. இப்போட்டியில்அவுஸ்திரேலிய மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
இதன்போது அதிவேக துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல் அணிக்காக 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தமை சிறப்பம்சமாகும்.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தா டிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 399 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 44 பந்து வீச்சுகளில் 106 ஓட்டங்களை கிளென் மெக்ஸ்வெல் பெற்றதுடன் டேவிட் வார்னர் 104 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 71 ஓட்ட ங்களையும் மார்னர் லாபுசாக்னே 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி, நெதர்லாந்து அணிக்கு 400 ஓட்ட ங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago