2025 ஜூலை 05, சனிக்கிழமை

வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணம்: பிஜியிடம் தோற்றது இலங்கை

Editorial   / 2019 ஜூலை 18 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் லிவர்பூலின் எம் அன்ட் எஸ் பாங்க் அரங்கத்தில் இடம்பெற்றுவரும் 15ஆவது வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று  இடம்பெற்ற பிஜியுடனான குழு ஈ போட்டியிலும் இலங்கை தோற்றது.

இப்போட்டியின் முதலாவது காற்பகுதியில் கடுமையாகப் போராடிய தரவரிசையில் 18ஆவது இடத்திலிருக்கும் இலங்கை 17ஆவது இடத்திலிருக்கும் பிஜிக்கெதிராக 11-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. இலங்கையணியின் தலைவி சத்துராங்கி பல இடைமறிப்புகளை மேற்கொண்டு நாயகியதாகத் திகழ்ந்தபோதும், அதே போன்ற பணியை பிஜியின் கோல் காப்பாளரான எபிஸகி கஹடொகாவும் ஆற்றியிருந்தார்.

இந்நிலையில், இரண்டாவது காற்பகுதியில் இலங்கையின் கோல் எய்பவரான தர்ஜினி சிவலிங்கம் புள்ளிகளைப் பெற கஹடொகா கட்டுப்படுத்திய நிலையில், பிஜி 17 புல்ளிகளைப் பெற்ற நிலையில், இலங்கை ஒன்பது புள்ளிகளையே பெற்ற நிலையில் போட்டியின் அரைப்பகுதியில் 27-20 என்ற புள்ளிகள் கணக்கில் பிஜி முன்னிலை பெற்றது.

அந்தவகையில், மூன்றாவது காற்பகுதியில் தர்ஜினியை பந்துப்பரிமாற்றங்கள் வந்தடையாத நிலையில், இலங்கை எட்டுப் புள்ளிகளையே பெற்ற நிலையில் பிஜி 20 புள்ளிகளைப் பெற்றதன் காரணமாக 47-28 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இறுதிக் காற்பகுதியில் 12 புள்ளிகளை பிஜி பெற்ற நிலையில், 16 புள்ளிகளை இலங்கை பெற்றபோதும் 59-44 என்ற மொத்த புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.

அந்தவகையில், எம்.எஸ் பாங்க் அரங்கத்தில் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் இடம்பெறவுள்ள 15/16ஆம் இடத்துக்கான போட்டியில் சிங்கப்பூரை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை இவ்வுலகக் கிண்ணத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கான பட்டியலில் 271 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் தர்ஜினி காணப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .