Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியனானதன் மூலம் நாளை வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் நான்காமிடத்துக்கு றோமானியாவின் சிமோனா ஹலெப் முன்னேறவுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் உலகின் 10ஆம்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டிருந்த உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெறும் 56 நிமிடங்களில் வென்று சம்பியனாகியிருந்தார்.
அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸுக்கெதிரான குறித்த போட்டியில் சேர்ஃப் செய்வதன் புள்ளிகளைப் பெறும் அவரின் திறனைக் குறிவைத்த ஹலெப், அவரின் சேர்ஃப்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதுடன், அவரை விட வெகுவாக களத்தில் நடமாடி ஒவ்வொரு புள்ளிக்குமாக செரீனாவை நீண்ட நேரம் விளையாட வைத்து அவரைத் தவறுகள் புரிய வைத்தே தனது முதலாவது விம்பிள்டன் பட்டத்தை ஹலெப் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில், தனது இரண்டாவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை இந்த விம்பிள்டன் தொடரோடு வென்றுள்ள ஹலெப், தொடரை ஏழாமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்து தற்போது மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்துக்குச் செல்லவுள்ளார்.
அந்தவகையில், தனது அரையிறுதிப் போட்டியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினாவை ஹலெப் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றதுடன், தனது அரையிறுதிப் போட்டியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் பார்பொரா ஸ்ரைக்கோவாவை வென்று இறுதிப் போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதிபெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
05 Jul 2025