Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Janu / 2023 நவம்பர் 15 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி ரர் விராட் கோலி சதம் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் 50-வது சதம் எனும் மைல் கல்லை எட்டி சச்சின் டெண்டுலர்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரேகித் – ஷுப்மன் கில் கூட்டணி ஓப்பனிங் செய்தது. போல்ட்டின் முதல் பந்தே 2 ஓட்டங்களை விளாசிய ரோகித், முதல் ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ஓட்டங்களை சேர்த்தார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புல் ஷாட் சிக்ஸர்கள் , பவுண்டரிகள் என அதிரடி காட்டிய ரோகித் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 47 ஓட்டங்கள் குவித்தது.
விரைவாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9வது ஓவரில் டிம் சவுதியின் பந்துவீச்சில் 47 ஓட்டங்களுக்கு விக்கெட்டானார். இதையடுத்து, விராட் கோலி களம்புகுந்தார். ரோகித் சென்ற பின் ஷுப்மன் கில் மட்டையை சுழற்றினார். இதனால், 12.2 ஓவர்களில் ஷுப்மன் கில் சிக்ஸர் அடிக்க இந்திய அணி 100 ஓட்டங்களை எட்டியது. இதற்கு அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கில்லின் 13வது ஒருநாள் அரைசதம் இதுவாகும்.
தொடர்ந்து இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 79 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஷுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை அணியின் பிசியோ சோதித்து பார்த்தார். பின்னர் ரிட்டையர் ஹர்ட் முறையில் விளையாடாமல் பெவிலியன் திரும்பினார் கில். அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார்.
சச்சின் சாதனை முறியடிப்பு:
கில் சென்ற பிறகு விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 60 பந்துகளை சந்தித்த கோலி, 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 114 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. 29வது ஓவரில் இந்திய அணி 200 ஓட்டங்களை கடந்தது. தொடர்ந்து கோலியுடன் ஸ்ரேயஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் 7 ரன் ரேட் என்பதை குறையாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்ரேயஸ் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது அரைசதம் பதிவு செய்தார்.
.அதேநேரம், சதத்தை நோக்கி முன்னேறிய விராட் கோலி எதிர்பார்த்தபடி, வரலாற்று சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்து 50வது சதம் அடித்தார் விராட் கோலி. சச்சின் முன்னிலையில் இந்த சாதனையை படைத்தார். 106 பந்துகளை சந்தித்த கோலி, 8 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பின் 117 ஓட்டங்களில் டிம் சவுதியின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025