Editorial / 2019 ஜனவரி 20 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து, இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான நுவான் பிரதீப் விலகியுள்ளார். தனது இடது பின்தொடை தசைநாரில் முதலாம் தர உபாதைக்குள்ளாகியுள்ளதாக ஸ்கான்களில் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த தொடரிலிருந்து பிரதீப் விலகியுள்ள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியின் முதல்நாளான கடந்த வியாழக்கிழமையே பிரதீப் காயமடைந்திருந்தார். அப்போட்டியில் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த நிலையில் களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
எவ்வாறாயினும் பிரதீப்பின் விலகல் இலங்கையணிக்கு பெரும் பாதிப்பாக அமையாது என்றே கருதப்படுகிறது. ஏனெனில், இலங்கையின் இறுதி டெஸ்ட் தொடரான நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் நுவான் பிரதீப் காணப்பட்டிருந்தபோதும் லஹிரு குமார, சுரங்க லக்மால், கசுன் ராஜித, துஷ்மந்த சமீர ஆகிய வேகப்பந்துவீச்சாளகளே நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட்களில் விளையாடியிருந்தனர்.
இதேவேளை, இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட், முதுகு உபாதை காரணமாக குறித்த குழாமிலிருந்து விலகியுள்ள நிலையில் அவரை குறித்த குழாமில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜஹை றிச்சர்ட்சன் பிரதியிட்டுள்ளார்.
12 minute ago
12 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
12 minute ago
22 minute ago