2025 மே 21, புதன்கிழமை

வென்றது இலங்கை; தொடரும் வசமானது

Freelancer   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதுடன், 2-1 என தொடரையும் கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சரித் அசலங்க 47 ஓட்டங்களையும் தனஞ்ஜய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றனர். தென் ஆபிரிக்கா அணி சார்பில் கேஷவ் மஹராஜ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

204 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா, 30 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அவ்வணி சார்பில் துடுப்பாடிய ஹென்றிச் க்ளாசென் 22 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். 

பந்து வீச்சில் மஹீஸ் தீக்ஷண 4 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர, வனிது ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .