Editorial / 2019 ஜனவரி 20 , பி.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஏழாவது நாளான இன்று, உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் டானியல் கொலின்ஸை எதிர்கொண்ட ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 0-6, 2-6 என்ற நேர் செட்களில் 56 நிமிடங்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், ஐந்து தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்யாவின் மரியா ஷரபோவா தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-4, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-0, 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் செக் குடியரசின் தோமஸ் பேர்டிச்சை வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
11 minute ago
11 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
21 minute ago