Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரிலிருந்து, நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வெளியேற்றப்பட்டது.
ஹொல்ஸ்டைன் கீலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இரண்டாவது சுற்றுப் போட்டியில் பெனால்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே தொடரிலிருந்து பயேர்ண் வெளியேற்றப்பட்டிருந்தது.
இப்போட்டியின் வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்ததுடன், மேலதிக நேரத்திலும் அவ்வாறே காணப்பட்டிருந்து பின்னர் பெனால்டியில் 5-6 என்ற ரீதியில் பயேர்ண் தோல்வியடைந்திருந்தது.
2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் தம்மை விட குறைந்த லீக் அணியால் பயேர்ண் வெளியேற்றப்படுவது இதுவே முதற்தடவையாகும். தவிர, 12 ஆண்டுகளில் முதற்தடவையாக அரையிறுதிக்குச் செல்லாமல் பயேர்ண் வெளியேறியுள்ளது.
3 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago