Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது சிட்னியில், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட இரண்டு அணிகளுக்குமிடையிலான இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்ற அவுஸ்திரேலியா தொடரை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நிலையில், வெள்ளையடிப்பைத் தவிர்ப்பதற்கு பந்துவீச்சு, துடுப்பாட்டம் என அனைத்து துறைகளிலும் பலத்த முன்னேற்றத்தை நியூசிலாந்து காண்பிக்க வேண்டியுள்ளது.
அந்தவகையில், சிட்னி ஆடுகளமானது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகையில் இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது தொடர்பில் ஆராய்கின்ற நிலையில், காயமடைந்த ட்ரெண்ட் போல்டுக்குப் பதிலாக குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் வில் சோமர்வில், நியூசிலாந்து அணியில் சக சுழற்பந்துவீச்சாளர் மிற்செல் சான்ட்னெரை பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடர் முழுவதும் விக்கெட்டைக் கைப்பற்றும் வகையில் மிற்செல் சான்ட்னெர் பந்துவீசியிருக்காததுடன், அவுஸ்திரேலியாவின நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்காக சிட்னியில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் வில் சோமர்வில், உயரமானவராக இருக்கின்ற நிலையில் பந்தை அதிகம் எழும்பச் செய்யக்கூடியவராகவும் காணப்படுகிறார்.
இதேவேளை, ட்ரெண்ட் போல்டை அணியில் சக வேகப்பந்துவீச்சாளர் மற் ஹென்றி பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் நியூசிலாந்தின் எந்தத் துடுப்பாட்டவீரரும் இத்தொடரில் சொல்லிக் கொள்ளும்படியாக விளையாடியிருக்காததுடன், குழாமில் மேலதிக துடுப்பாட்டவீரராக இருக்கும் ஜீட் றாவல் குறிப்பிட்ட காலமாகவே ஓட்டங்களைப் பெறத் தடுமாறியிருந்த நிலையில் மிகவும் இக்கட்டான நிலையில் நியூசிலாந்து காணப்படுகிறது.
இதேவேளை, நியூசிலாந்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக, அணித்தலைவர் கேன் வில்லியம்சன், துடுப்பாட்டவீரர் ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் காய்ச்சலுக்கான அறிகுறிகளை நேற்றுக் கொண்டிருந்து பயிற்சிகளைத் தவறவிட்டனர்.
இந்நிலையில், இவர்கள் நாளை டெஸ்ட் போட்டிக்கு தயாராகிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இவர்களோடு டொம் லேதம், றொஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினால்தான் அவுஸ்திரேலியாவுக்கு நியூசிலாந்து சவாலை வழங்க முடியும்.
மறுபக்கமாக, அவுஸ்திரேலிய அணியிலும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் ஐந்து பந்துவீச்சாளர்களாகக் களமிறங்கும் கருத்து காணப்படுகின்றபோதும் இறுதியில் பெரும்பாலும் கடந்த போட்டியில் விளையாடிய அணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேதன் லையனோடு, மிற்செல் ஸ்வப்ஸனுக்கு டெஸ்ட் அறிமுகத்தை வழங்கி இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானிக்கும் பட்சத்தில் ஒரு துடுப்பாட்டவீரரின் இடம் பறிபோகும் என்ற நிலையில், கடந்த போட்டியில் ட்ரெவிஸ் ஹெட் சதம் பெற்ற நிலையில், மத்தியூ வேட்டே அணிக்கு வெளியே செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் எவரும் அழுத்தத்தில் இல்லாதபோதும், தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அடம் வொஜஸ் ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலியா முழுவதும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் காரணிகளைத் தவிர்த்து இந்த விடயமும் இப்போட்டியில் பேசுபொருளாகக் காணப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பிக் பாஷ் லீக்கின் போட்டியொன்று காட்டுத்தீயால் ஏற்பட்ட நச்சுப்புகை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இது தொடர்பான சர்வதேச கிரிக்கெட் சபையின் வரையறைகள் எதுவும் இல்லாத நிலையில், இது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும், வீரர்கள் சங்கமும் பணியாற்றுகின்றன.
ஆக, இவ்விடயம் தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியவர்களாக நடுவர்களே தற்போது காணப்படுகின்ற நிலையில், நாளை மறுதினம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago