Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டுடனான போட்டியில் லிவர்பூல் வென்றது.
இப்போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் சக பின்களவீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய லிவர்பூலின் மத்தியகளவீரர் ஜோர்ஜினியோ விஜ்நால்டும் ஆரம்பத்திலேயே தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
எவ்வாறெனினும், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் சக முன்களவீரர் றொபேர்ட் ஸ்னொட்கிராஸின் மூலையுதையை தலையால் முட்டிக் கோலாக்கிய வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் பின்களவீரர் இஸா டியொப் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
பின்னர் லிவர்பூலின் பின்களவீரர் வேர்ஜில் வான் டிஜிக்கால் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய உதையானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.
இந்நிலையில், போட்டியின் 54ஆவது நிமிடத்தில் சக மத்தியகளவீரர் டெக்லான் றைஸிடமிருந்து பெற்ற பந்தை மாற்றுவீரராகக் களமிறங்கிய வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் பப்லோ பொர்னல்ஸ் கோலாக்கி தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
எவ்வாறெனினும் 68ஆவது நிமிடத்தில் சக பின்களவீரர் அன்டி றொபேர்ட்ஸனிடமிருந்து வந்த பந்தைக் கோலாக்கிய லிவர்பூலின் முன்களவீரர் மொஹமட் சாலா கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
பின்னர் போட்டி முடிவடைய ஒன்பது நிமிடங்களிருக்கையில், ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்லிடமிருந்து வந்த பந்தை லிவர்பூலின் இன்னொரு முன்களவீரரான சாடியோ மனே கோலாக்க லிவர்பூல் முன்னிலை பெற்றது.
இதையடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கோல் கம்பத்துக்குள் சாடியோ மனே பந்தைச் செலுத்தியபோதும் காணொளி உதவி மத்தியஸ்தர் மீளாய்வில் ஓஃப் சைட் எனக் கோல் நிராகரிக்கப்பட இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 79 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகிறது. 57 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றியும், 50 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 44 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago