Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலஸ் பெப்பே பெற்றிருந்ததோடு, வொல்வ்ஸ் சார்பாக ருபென் நெவெஸ், ஜோவா மோட்டினியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இப்போட்டிகளின் முடிவில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 44 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் 44 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும், கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாமிடத்தில் காணப்படுவதோடு, சிற்றியை விட இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளது.
மூன்றாமிடத்தில் 40 புள்ளிகளுடன் நடப்புச் சம்பியன்கள் லிவர்பூலும், 39 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும் காணப்படுகின்றன. இவையிரண்டும் யுனைட்டெட்டை விட ஒரு போட்டி குறைவாகவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
40 minute ago