2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஸ்பானிய லா லிகா தொடர்: செல்டா விகோவை வென்றது றியல் மட்ரிட்

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், செல்டா விகோவின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் றியல் மட்ரிட் வென்றிருந்தது.

இப்போட்டியின் 12ஆவது நிமிடத்தில் சக முன்களவீரரான கரெத் பேலிடமிருந்து பெற்ற பந்தை றியல் மட்ரிட்டின் முன்களவீரரான கரிம் பென்ஸீமா கோலாக்க அவ்வணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

இந்நிலையில், போட்டியின் 56ஆவது நிமிடத்தில் செல்டா விகோவின் மத்தியகளவீரரான டெனிஸ் சுவாரஸை காலால் மிதித்தமைக்காக றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரர் லூகா மோட்ரிட்ச் சிவப்பு அட்டை காண்பிக்கப் பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதையடுத்த ஐந்தாவது நிமிடத்தில் றியல் மட்ரிட்டின் இன்னொரு மத்தியகளவீரரான டொனி க்றூஸ், கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்திலிருந்து பெற்ற அபாரமான கோலால் தமது முன்னிலையை றியல் மட்ரிட் இரட்டிப்பாக்கியது.

இந்நிலையில் போட்டியின் 80ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான இஸ்கோ மற்றும் கரிம் பென்ஸூமா, பின்களவீரர் மார்ஷெல்லோவின் பங்களிப்பில் மாற்றுவீரராகக் களமிறங்கிய முன்களவீரரான லூகாஸ் வஸ்கூஸ் பெற்ற கோலோடு 3-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

பின்னர், போட்டியின் இறுதி நிமிடங்களில், மாற்றுவீரராகக் களமிறங்கிய செல்டா விகோவின் மத்தியகளவீரரான இகர் லொஸாடா அரகுன்டே கோலொன்றைப் பெற்ற நிலையில், இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றிருந்தது.

இதேவேளை, நேற்று  அதிகாலை இடம்பெற்ற நடப்பு லா லிகா தொடரின் ஆரம்பப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் பில்பாவோவிடம் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .