Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹங்கேரி குரான் பிறீயில் மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த பிரித்தானியாவின் நொரிஸ் முதலிடம் பெற்ற நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த அவரின் சக மக்லரன் அணி ஓட்டுநரான ஒஸ்கார் பியாஸ்திரி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் ஜோர்ஜ் ரஸல் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி 284 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளார். 275 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நொரிஸும், 187 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பனும் காணப்படுகின்றனர்.
34 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
53 minute ago
2 hours ago